471. Madhwa Marriage – Part III

முதல் வலைப்பதிவில் திருமணம் தொடர்பான ஆரம்ப வேலைகளைப் பற்றிப் பார்த்தோம். இரண்டாவது வலைப்பதிவில், பெண் வீட்டாரும்,  மாப்பிள்ளை வீட்டாரும் மண்டபத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களைப் பற்றி பார்த்தோம். இந்த வலைப்பதிவில் திருமண மண்டபத்தில் முகூர்த்தத்திற்கு முதல் நாள் நடக்கும் சுப நிகழ்வுகளைப் பற்றிப் பார்ப்போமா ! திரும்பவும் சொல்ல விரும்புகிறேன். இந்த சடங்கு எங்கள் வீட்டுத் திருமணத்தில்  நடக்கவில்லையே, நிகழ்வுகள் வரிசை மாறி இருக்கிறதே என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு குடும்பப் பழக்கமும் சிறிது வித்தியாசப் படலாம். எதுவும் தவறில்லை.

11.மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்பதற்கான சாமான்கள் : பெண் வீட்டார் வாசலிலே காத்திருந்து, மாப்பிள்ளை வீட்டார் வரும்போது மேள, தாளத்துடன் வரவேற்க வேண்டும். பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுக்க வேண்டும். ஆண்களுக்கு சந்தனம் கொடுக்க வேண்டும். மாப்பிள்ளை, அவர் பெற்றோர், முக்கிய உறவினர்களுக்கு மாலை, மரியாதை செய்ய வேண்டும். ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்ல வேண்டும். அனைவருடைய பொருட்களை எடுத்துச் செல்ல உதவி, ரூமிற்கு அழைத்துச் சென்று, குடிக்க காபி/டீ தருவித்து உபசரிக்க வேண்டும்.

திருமணத்திற்கு முன்தினம், அதாவது ஜானவாசத்தன்று காலையிலிருந்தே மண்டபத்தில் திருமண சடங்குகள் ஆரம்பமாகி விடும். அவை என்னென்னவென்று பார்ப்போமா ?

12.தேவுரு சமாராதனை : இதை புரோகிதர் நடத்தி வைப்பார். ஒரு பிரம்பை ஒரு வேஷ்டி, புடவை கொண்டு அலங்கரித்து பூஜை செய்யச் சொல்லுவார். பின், அதை பெண்/மாப்பிள்ளை உடுத்த வேண்டும். தேவுரு சமாராதனை பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் தனித்தனியாக தனித்தனி புரோகிதரைக் கொண்டு செய்வர்.

13.சொண்டிகை முகூர்த்தம் : இதை பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் தனித்தனியாக செய்வது வழக்கம். புரோகிதர் கூட தேவையில்லை. ஒரு சிறிய வெள்ளை காடாத்துணி/கர்ச்சீப் எடுத்துக் கொண்டு மஞ்சள் நீரில் முதலே நனைத்து, உலர்த்தி எடுத்து வர வேண்டும். மஞ்சள் இடிக்கும் விழாவில் இடித்துப் பொடி செய்த மஞ்சள் தூளையும் எடுத்து வர வேண்டும். மஞ்சளை தண்ணீர் விட்டு சிறிது அரிசிமாவு சேர்த்து சப்பாத்தி மாவு போல செய்து கொள்ள வேண்டும். சுமங்கலிகள் / பெண் / மாப்பிள்ளை சிறு சிறு உருண்டைகளாக (சொண்டிகை போல) பிடித்து கர்ச்சீப் மேலே வைக்க வேண்டும். அதன் மேல் குங்குமத்தில் பொட்டு வைக்க வேண்டும். எல்லாரும் வைத்து முடித்த பின்பு அதை ஸ்வாமி படத்தின் முன்பு வைத்து வழிபட வேண்டும். பின், அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று துளசிச் செடிக்குக் கரைத்து விடலாம்.

14.அஷ்டவர்க்கம் : பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் தனித்தனியாக தனித்தனி புரோகிதரை வைத்துக் கொண்டு, தங்கள் நெருங்கிய பந்துகளுக்கு வாங்கிய உடைகளை பரிசளிக்க வேண்டும். பெண்/மாப்பிள்ளை, மற்றும் பெற்றோர் பெரியவர்கள் காலில் விழுந்து, ஆசியும் பெற வேண்டும். இதை பாத பூஜை என்றழைப்பார்கள். அவ்வாறே மற்றவர்களும் பெண்/மாப்பிள்ளையின் பெற்றோருக்கு திருமணத்திற்காக வாங்கின உடைகளைப் பரிசளிப்பார்கள்.

15.நாந்தி : பித்ரு தேவதைகளுக்கான பூஜையே நாந்தி என்பது. இதையும் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் தனித்தனி புரோகிதரின் துணை கொண்டு தனித்தனியாக செய்வார்கள். சில ரவிக்கைத் துண்டுகளைத் தயாராக வைத்திருந்தாலே போதும். மற்றவற்றை புரோகிதர் பார்த்துக் கொள்வார்.

இவை முடிந்த பின், அனைவரும் மதிய உணவு அருந்திவிட்டு, பெண் பார்க்கும் வைபவத்தைத் துவங்கலாம்.

16.பெண் பார்க்கும் வைபவம் : பெண்ணை அவருடைய பெற்றோருடன் மேடையில் அமர்த்தி, தாங்கள் கொண்டு வந்த பொருட்களை தட்டுகளில் வைத்து மாப்பிள்ளை வீட்டார் வழங்குவார்கள். அவை

1.பெண்ணுக்கான புடவை, ரவிக்கை

2.அலங்காராப் பொருட்களான கண்மை, முகப் பூச்சு, பவுடர், ஐலைனர், ஐப்ரோ பென்சில், பொட்டு, வளையல், ஹேர் கிளிப், கர்ச்சீப் போன்றவை.

3.பெண்ணுக்கான சோப்பு, சீப்பு, கண்ணாடி, டூத்பேஸ்ட், டூத்பிரஷ், ஹேர் ஆயில், வாசனைதிரவியம்

4.கைப்பை மற்றும் பர்ஸ்

5.பெண்ணுக்கான நகை

6.இரண்டு கடலை கோபுரம், 2 பச்சை ரவிக்கைத் துண்டுகளுடன்.

7.கடலை உருண்டைகள்

8.பிஸ்கட், மிட்டாய், பெப்பர்மிட் உருண்டைகள்

9.பொட்டுக்கடலை, அச்சு வெல்லம் டப்பாக்கள்

10.சர்க்கரை அச்சு (கலர் கலராய்)

11.பெண், மாப்பிள்ளை உருவம், பெயர், திருமண தேதி பொரித்த முழு

கொப்பரை

12.வேறு டிசைன் முழு, மற்றும் அரைக் கொப்பரைகள் (குறைந்தபட்சம் ஆறு)

13.பொக்கிட்டு வாசனைப் பொடி பாக்கெட் – 2

14.சிறிய கிண்ணங்கள் (மெட்டல்) – 6

15.குட்டி குட்டி விசிறி, பூ டிசைன்

16.வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம்

17.பூ

18.ஐந்து வகை பழங்கள்

19.டிரை ஃப்ரூட்ஸ்

20.மஞ்சள், குங்குமம், சந்தனம், அட்சதை, ஹளுதி கிண்ணங்கள் கொண்ட தட்டு.

21.ஐந்து தேங்காய்கள்

22.ஒரு வெள்ளி டம்ளர்

23.அலங்கார பொம்மைகள்

24.கல்கண்டு

25.சர்க்கரையில் பெண், மாப்பிள்ளை பெயர் ஜெம்ஸ், அரிசிமிட்டாய் கொண்டு எழுதியது

26.சீர் முறுக்குகளான தேங்குழல்(5), முள்முறுக்கு(5) கைமுறுக்கு(5)

27.கலர், கலர் சாக்லேட்

17.வரபூஜை :  பெண் வீட்டார் மாப்பிள்ளை வகை முக்கிய உறவினருக்கு பொக்கிட்டு கொடுத்து மரியாதை செய்வர். அதேபோல் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டைச் சேர்ந்த முக்கியமான நபர்களுக்கு பொக்கிட்டு கொடுப்பர். பெண் வீட்டாரும் மாப்பிள்ளைக்குக் கொடுக்க வேண்டிய கீழ்க்கண்ட பொருட்களைத் தட்டுகளில் வைத்து, மாப்பிள்ளை தன் பெற்றோருடன் மேடையில் அமர்ந்ததும் வழங்குவார்கள்.

1.மாப்பிள்ளைக்கான் கோட், சூட், டை, ஷூ, சாக்ஸ், பெல்ட், வாலட்

2.அலங்காராப் பொருட்களான முகப் பூச்சு, பவுடர், சோப்பு, சீப்பு, கண்ணாடி, டூத்பேஸ்ட், டூத்பிரஷ், ஹேர் ஆயில், வாசனைதிரவியம், ஷேவிங் செட்

3.மாப்பிள்ளைக்கான நகை

4.இரண்டு கடலை கோபுரம், 2 பச்சை ரவிக்கைத் துண்டுகளுடன்.

5.கடலை உருண்டைகள்

6.பிஸ்கட், மிட்டாய், பெப்பர்மிட் உருண்டைகள்

7.பொட்டுக்கடலை, அச்சு வெல்லம் டப்பாக்கள்

8.சர்க்கரை அச்சு (கலர் கலராய்)

9.பெண், மாப்பிள்ளை உருவம், பெயர், திருமண தேதி பொரித்த முழு

கொப்பரை

10.வேறு டிசைன் முழு, மற்றும் அரைக் கொப்பரைகள் (குறைந்தபட்சம் ஆறு)

11.பொக்கிட்டு வாசனைப் பொடி பாக்கெட் – 2

12.சிறிய கிண்ணங்கள் (மெட்டல்) – 6

13.குட்டி குட்டி விசிறி, பூ டிசைன்

14.வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம்

15.பூ

16. ஐந்து வகை பழங்கள்

17.டிரை ஃப்ரூட்ஸ்

18.மஞ்சள், குங்குமம், சந்தனம், அட்சதை, ஹளுதி கிண்ணங்கள் கொண்ட தட்டு.

19.ஐந்து தேங்காய்கள்

20.அலங்கார பொம்மைகள்

21.கல்கண்டு

22.சர்க்கரையில் பெண், மாப்பிள்ளை பெயர் ஜெம்ஸ், அரிசிமிட்டாய் கொண்டு எழுதியது

23.சீர் முறுக்குகளான தேங்குழல்(5), முள்முறுக்கு(5) கைமுறுக்கு(5)

24.கலர், கலர் சாக்லேட்

18.ஜானவாச ஊர்வலம் : மாப்பிள்ளை குழந்தைகள் புடை சூழ, திறந்த அலங்கரிக்கப்பட்ட காரிலோ, சாரட் வண்டியிலோ பக்கத்திலுள்ள பிள்ளையார் கோவில் வரை ஊர்வலம் போவார். அப்போது, பாண்டு மற்றும் மங்கல வாத்தியக்காரர்களும் தங்கள் வாத்தியங்களை வாசித்தபடி முன் செல்வார்கள். பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் ஆடிப் பாடிய படி உடன் செல்வார்கள். பிள்ளையார் கோவிலில் பெண்/மாப்பிள்ளை பெயருக்கு அர்ச்சனை செய்தபின் மண்டபத்திற்குத் திரும்பி வருவார்கள்.  ஜானவாசம் முடிந்தவுடன், மாப்பிள்ளை வீட்டாருக்கு பூம விருந்து வழங்கப்படும். 4 தலைவாழை இலைகளை சேர்த்துப் போட்டு, இலைக்கு முன் வர்ண கோலப்பொடி கொண்டு கோலம் போட்டு, அதன் முன் விளக்குகளையும், மெழுகுவர்த்திகளையும் ஏற்றி அலங்கரிப்பர். ஏகப்பட்ட பதார்த்தங்களைப் பரிமாறி, மாப்பிள்ளையை உபசரிப்பர். அவருக்கு இருபுறமும், அவர் வீட்டு ஜனங்களுக்கும் இலை போட்டு, ரங்கோலி இட்டு, உணவு பரிமாறி உபசரிப்பர். மணமகளின் தாயார், மாப்பிள்ளைக்கு பாயசம், அன்னம் பரிமாற வேண்டும். அவருக்கு அதற்காக  மாணமகனின் வீட்டார் புடவை, ரவிக்கை வைத்துக் கொடுப்பார்கள்.

19.ரிசப்ஷன் : ரிசப்ஷன் என்கிற வரவேற்பு உள்ளூரிலுள்ள உற்றார், உறவினர், நண்பர்களுக்காக பெண் வீட்டார் சார்பில் ஜானவாசத்தன்றோ, அல்லது திருமணம் முடிந்த பின்போ மாலை வேளையில் நடத்தப்படும். மாப்பிள்ளை வீட்டார் தங்கள் ஊரில் திருமணம் முடிந்தபின் அதை வைத்துக் கொள்வார்கள். அழகாக அலங்கரிக்கப் பட்ட மேடையில் பெண், மாப்பிள்ளை அமர்ந்து கொண்டு வாழ்த்துக்களையும், பரிசுகளையும் பெற்றுக் கொள்வார்கள். ஜானவாச இரவு உணவு கிராண்டாக இருக்கும்.

20.மங்கள சூத்ரம் கோர்ப்பு : ஜானவாச இரவன்று, எல்லா வேலையும் முடிந்தபின்பு, மங்கள சூத்ரம் கோர்த்து வைத்து விட்டுதான் படுப்பார்கள். பொதுவாக, மாப்பிள்ளை வீட்டார் இரண்டு தாலியும், பெண் வீட்டார் ஒரு தாலியும் போடுவது வழக்கம். சில வீடுகளில் பழக்கங்கள் மாறுபடலாம். அவரவர் வீட்டு வழக்கப்படி செய்துகொள்வது நலம். அவரவர் பூஜை ரூமில் ஸ்வாமி முன்னால் 5 சுமங்கலிகள் அமர்ந்து கொண்டு தாலி கோர்ப்பார்கள். ட்வைன் நூலை மஞ்சள் நீரில் நனைத்து, பெண்ணின் அம்மா தங்கள் வீட்டுத் தாலியை முதலில் கோர்க்க, இரு பக்கமும் குண்டு மற்ற சுமங்கலிகள் கோர்ப்பார்கள். சில கருகுமணிகளையும் கோர்ப்பது வழக்கம். இதே போல், மாப்பிள்லை வீட்டார் இரண்டு தாலிகளை ரெடி செய்து வைப்பார்கள்.தாலிக்கு குங்குமம் தடவி, ஸ்வாமி படத்திற்கு முன்பு வைத்து விட வேண்டும்.

மற்ற  விஷயங்களை அடுத்த வலைப்பதிவில் காண்போம்.

 

Advertisements

470. Madhwa Marriage – Part II

திருமணம்  செய்ய முடிவெடுத்தபின், பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி போன வலைப்பதிவில் பார்த்தோம்.  மண்டபத்திற்குக் கிளம்பும் முன், வீட்டில் நடக்கும் சின்ன, சின்ன சுப நிகழ்வுகளையும் பார்த்து முடித்து விட்டோம். இந்த வலைப்பதிவில், பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் மண்டபத்திற்குப் பொதுவாக கொண்டு  செல்ல வேண்டிய பொருட்கள் என்னென்னவென்று பார்ப்போமா !

திருமணம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே பெண் வீட்டாரும் சரி, மாப்பிள்ளை வீட்டாரும் சரி, மண்டபத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய பொருட்களை லிஸ்ட் போட்டு, சரி பார்த்து, தனியாக பேக் செய்து எடுத்து வைத்துக் கொள்வது நலம்.

9.பெண் வீட்டார் மண்டபத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் :

1.குலதெய்வம் போட்டோ

2.வெங்கடாசலபதி, பத்மாவதி போட்டோ

3வினாயகர், லக்ஷ்மி, சரஸ்வதி போட்டோ

4சிவன், பார்வதி போட்டோ

5.கௌரி முகம்

6.மங்கள கௌரி

7.துளசிச்செடி

8.விளக்குத்திரி – 25

9.பூத்திரி – 25

10.கஜவஸ்திரம் – 25

11.விளக்கு எண்ணெய்

12.நெய்

13.தீப்பெட்டி

14.வெற்றிலை

15.பாக்கு

16.பூ

17.பழம்

18.தேங்காய்

19.கோலமாவு

20.காவி

21.நல்லெண்ணெய்

22.பித்தளைக் குத்துவிளக்கு -2

23.மஞ்சள், குங்குமம், சந்தனம், அட்சதை, ஹளுதி கிண்ணம் – 3 செட் (ஒன்று மண்டப வாசல் ரிசப்ஷனுக்கு, ஒன்று மண்டப ஸ்டேஜிற்கு, ஒன்று பெண் வீட்டார் பூஜை ரூமில்).

24.ஸ்வாமி ஆரத்தி தட்டு சொடலுடன்.

25.பித்தளை ஆரத்தித் தட்டு

26.ஸ்டேப்ளர், பின் பாக்சுடன்.

27.கத்தி.

28.கத்திரி – 3

29.பித்தளைத் தட்டுகள் – 2

30.மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்பதற்கான சாமான்கள்

31.அஷ்டவர்க்க சாமான்கள்

32.தேவுரு சமாராதனை சாமான்கள்

33.நாந்தி சாமான்கள்

34.சொண்டிகை முகூர்த்த சாமான்கள்

35.ஆச்சார் லிஸ்ட் சாமான்கள்

36.ஜானவாசம் என்கிற மாப்பிள்ளை அழைப்பு சாமான்கள்

37.ரிசப்ஷன் சாமான்கள்

38.காசி யாத்திரை சாமான்கள்

39.கௌரி பூஜை சாமான்கள்

40.தாலி கோர்ப்பு சாமான்கள்

41.முகூர்த்தம் சாமான்கள்

42.மங்களசூத்ரம் கோர்ப்பது

43.கிரஹப்பிரவேசம் சாமான்கள்

44.முறதுபாயணம் சாமான்கள்

45.நாகவல்லி சாமான்கள்

46.பெண் ஒப்படைத்தல்

47.முதலிரவு சாமான்கள்

48.க்ஷேமத்தண்டல் சாமான்கள்

49.பெண்ணிற்கு தேவையான உடைகள், நகைகள், மற்ற பொருட்கள்

50.பெண்ணின் பெற்றோருக்குத் தேவையான உடைகள், நகைகள், மற்ற பொருட்கள்

51.சம்பந்தி, மற்றும் அவர்கள் உறவினருக்குக் கொடுக்க வேண்டிய புது ஆடைகள்

52.ஸ்பேர் வேஷ்டி, அங்கவஸ்திரம், புடவை -5 செட்

53.உறவினர்/நண்பர்களுக்குக் கொடுக்க வேண்டிய பரிசுப் பொருட்கள்

54.ரவிக்கைத் துண்டுகள் – 20

55.மஞ்சள் இடித்த போது கிடைத்த மஞ்சள் கிழங்கின் பொடி

56.பேலா, பஞ்சபாத்திரம், உத்தரணி, முத்ரை, நாமம்

57.கற்பூர ஆரத்திக்கான தூபக்கால்

58.ஊதுபத்தி

10.மாப்பிள்ளை வீட்டார் மண்டபத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் :

1.குலதெய்வம் போட்டோ

2.வெங்கடாசலபதி, பத்மாவதி போட்டோ

3.வினாயகர், லக்ஷ்மி, சரஸ்வதி போட்டோ

4.விளக்குத்திரி – 10

5.பூத்திரி – 10

6.கஜவஸ்திரம் – 10

7.விளக்கு எண்ணெய்

8.நெய்

9.தீப்பெட்டி

10.பழம்

11.கோலமாவு

12.காவி

13.நல்லெண்ணெய்

14.பித்தளைக் குத்துவிளக்கு -2

15.மஞ்சள் குங்குமம் கிண்ணம் – 1 செட்

16.ஸ்வாமி ஆரத்தி தட்டு சொடலுடன்.

17.பித்தளை ஆரத்தித் தட்டு

18.ஸ்டேப்ளர், பின் பாக்சுடன்.

19.கத்தி.

20.கத்திரி – 2

21.பித்தளைத் தட்டுகள் – 2

22.அஷ்டவர்க்க சாமான்கள்

23.தேவுரு சமாராதனை சாமான்கள்

24.நாந்தி சாமான்கள்

25.சொண்டிகை முகூர்த்த சாமான்கள்

26.பெண் பார்க்கும் சாமான்கள்

27.ரிசப்ஷன் சாமான்கள்

28.தாலி கோர்ப்பு சாமான்கள்

29.முகூர்த்தம் சாமான்கள்

30.மங்களசூத்ரம் கோர்ப்பது

31.கிரஹப்பிரவேசம் சாமான்கள்

32.முறதுபாயணம் சாமான்கள்

33.சொண்டிகை முகூர்த்தத்தின் போது இடித்த மஞ்சளின் பொடி

34.சம்பந்தி, மற்றும் அவர்கள் உறவினருக்குக் கொடுக்க வேண்டிய புது ஆடைகள்

35.மாப்பிள்ளைக்குத் தேவையான உடைகள், நகைகள், மற்ற பொருட்கள்

36.மாப்பிள்ளையின் பெற்றோருக்குத் தேவையான உடைகள், நகைகள், மற்ற பொருட்கள்

37.ஸ்பேர் வேஷ்டி, அங்கவஸ்திரம், புடவை -5 செட்

38.உறவினர்/நண்பர்களுக்குக் கொடுக்க வேண்டிய பரிசுப் பொருட்கள்

39.ரவிக்கைத் துண்டுகள் – 20

40.பேலா, பஞ்சபாத்திரம், உத்தரணி, முத்ரை, நாமம்

 

மேற்கண்ட பொருட்கள் எல்லாவற்றையும் மாப்பிள்ளை வீட்டார் எடுத்துச் செல்ல முடியாவிட்டால் பரவாயில்லை. மண்டபத்தில் பெண் வீட்டார் தேவைப்படும் பொருட்களை ஏற்பாடு செய்து தருவார்கள்.

அப்பாடா, வேண்டிய பொருட்களை மண்டபத்திற்குக் கொண்டு சேர்த்து விட்டாலே  கொஞ்சம் நிம்மதி. மண்டபத்தில் நடக்கும் சுப நிகழ்வுகளைப் பற்றி அடுத்த வலைப்பதிவில் பார்ப்போம்.

 

469. Madhwa marriage – Part I

     காலம் ரொம்பவே மாறிப் போய் விட்டது. நடக்குமா என்று நாம் ஆசைப்பட்ட நிறைய விஷயங்கள் நிஜமாகவே நடக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் மிகவும் சகஜமாக பழக ஆரம்பித்து விட்டார்கள். மணப்பெண்ணைத் தங்கள்  பெண் போல் நடத்துவதைக் காணும்போது, “இதற்குத்தானே ஆசைப்பட்டோம்”, என்று உள்ளம் பூரித்துப் போகிறது. பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் கைகோர்த்துத் திருமண காரியங்களை நடத்துவதைக் காணும்போது உள்ளம் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறது. சரி, மாத்வா சம்பிரதாயப்படி நடக்கும் ஒரு திருமணத்திற்குத் தேவையான பொருட்கள் என்னென்ன, முக்கிய நிகழ்வுகள் யாவை என்றெல்லாம் பார்ப்போமா !

இதைப் படிக்கும் போது, எங்கள் வீட்டுத் திருமணத்தில் இது நடைபெறவில்லையே, இந்தப் பொருள் பயன்படுத்தப் படவில்லையே என்று சிலர் நினைக்கக் கூடும். வீட்டுக்கு வீடு, குடும்பத்திற்குக் குடும்பம் சில பழக்க, வழக்கங்கள் வித்தியாசப் படலாம். உங்களுக்கு ஏற்புடைய விஷயங்களை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள், முடியாதவற்றை விட்டுவிடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

1.பெண் பார்த்தல் : முதலில் பெண்ணுடைய ஜாதகத்தையும், மாப்பிள்ளையுடைய ஜாதகத்தையும் ஒரு நல்ல ஜோசியரிடம் கொடுத்து பொருத்தம் பார்க்க வேண்டும். பொருந்தினால், பெண்ணும், மாப்பிள்ளையும் போட்டோ பார்த்து, மற்ற விஷயங்களும் பிடித்தால், பெண் பார்க்கும் வைபவம் நடத்தலாம். ஒரு நல்லநாள் பார்த்து, மாப்பிள்ளை வீட்டாரை பெண் வீட்டுக்கு அழைத்து, பெண் பார்க்கச் சொல்லலாம். இருவருக்கும் பிடித்திருந்தால், கல்யாண ஏற்பாடுகளை ஆரம்பிக்கலாம்.

2.நிச்சயதார்த்தம் : ஒரு சுபநாளில் மாப்பிள்ளை வீட்டார் தங்கள் வீட்டிலோ, மண்டபத்திலோ பெண் வீட்டாரை அழைத்து நிச்சயதார்த்தம் நடத்த வேண்டும். பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கான உடை, மோதிரம், மற்றும் அவருக்குத் தேவையான பொருட்கள், மாப்பிள்ளையின் பெற்றோருக்கான புது ஆடைகள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், 5 வகை பழங்கள், பூ, இனிப்பு, பொட்டுக்கடலை, அச்சு வெல்லம் கொண்ட டப்பாக்கள், கடலை கோபுரம் 2, கடலை உருண்டைகள் 5, சீர் முறுக்குகளான தேங்குழல், கைமுறுக்கு. முள்முறுக்கு, சில ரவிக்கைத் துண்டுகளுடன் வர வேண்டும். மாப்பிள்ளை வீட்டாரும் அதேபோல, பெண்ணுக்குத் தேவையான பொருட்களுடன் தயாராக இருப்பார்கள். பெண்ணின் பெற்றோருக்கான புது ஆடைகளையும் கொண்டு வருவர். புரோகிதர் வந்து பெண், மாப்பிள்ளையின் பெற்றோரைத் தாம்பூலம் மாற்றிக் கொள்ள வைத்து, நிச்சயதார்த்த வைபவத்தை நடத்தி வைத்து, இரு வீட்டாரின் ஒப்புதலுடன் திருமண தேதியை அறிவித்து, லக்ன பத்திரிக்கையைப் படிப்பார்.

3.மஞ்சள் இடித்தல் : நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் இதை பெண்வீட்டார் தனியாகவும், மாப்பிள்ளை வீட்டார் தனியாகவும் அவரவர் வீட்டில் செய்வார்கள். முதலில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, விளக்கேற்றி, அதற்கு மஞ்சள், குங்குமம், பூ, சந்தனம், அட்சதை கொண்டு பூஜை செய்து, ஆரத்தி எடுக்க வேண்டும். ஒரு சிறு உரலையும், குழவியையும் எடுத்து சுண்ணாம்பு, காவி கொண்டு கோடுகள் போட்டு அலங்கரிக்க வேண்டும். பின், மஞ்சள், குங்குமம், பூ, சந்தனம், அட்சதை கொண்டு பூஜை செய்ய வேண்டும். ஒவ்வொரு சுமங்கலியாக வந்து 5 மஞ்சள் கிழங்குகளை உரலில் போட்டு ஒன்றிரண்டாக இடித்துத் தனியாக வைக்க வேண்டும். கடைசியாக, பெண்/மாப்பிள்ளை, அவர்கள் பெற்றோர், திருமண வயதில் உள்ள பெண்/பையன் மஞ்சள் இடித்து முடித்தபின், சுமங்கலிகளுக்குக் கண்டிப்பாக மஞ்சள், குங்குமம், மங்கலப் பொருட்கள், ரவிக்கைத்துண்டு, தக்ஷணை வழங்க வேண்டும். ஒன்றிரண்டாக இடித்த மஞ்சள் கிழங்குகளை மிஷினில் கொடுத்துப் பொடியாக்கி அரிசி மாவு கலந்து தினமும் வாசலில் கோலமிட பயன்படுத்த வேண்டும்(திருமணம் முடியும் வரை). அதில் சிறிது மஞ்சள் தூளை திருமணத்தின் போது கௌரி பூஜைக்குப் பயன்படுத்த வேண்டும். சொண்டிகை முகூர்த்தத்திற்கும் அந்த மஞ்சள் பொடியைத்தான் உபயோகிக்க வேண்டும். மஞ்சள் இடித்த அன்று திருமணத்திற்கான மங்கலப் பொருட்கள் ஏதாவது கண்டிப்பாக வாங்க வேண்டும். திருமணக்காரியம் அன்றே ஆரம்பித்ததாக ஐதீகம்.

4.திருமணப் பத்திரிக்கை பிரிண்ட் செய்தல் : நல்ல நாள் பார்த்து திருமணப் பத்திரிக்கை பிரிண்ட் செய்யக் கொடுக்க வேண்டும். முதல் பத்திரிக்கையை குலதெய்வத்தின் பாதத்தில் வைத்து வணங்கிவிட்டு, மற்றவர்களுக்கு வினியோகிக்கத் துவங்க வேண்டும்.

 5.சுமங்கலி பிரார்த்தனை : வீட்டில் சுபகாரியம் நடைபெறும் முன்பு முன்னோரின் ஆசி பெறுவது அவசியம் அல்லவா. பொதுவாக 5 சுமங்கலிகள் (சிலர் அப்பா வகை நெருங்கிய சொந்தமாகவும், சிலர் அம்மா வகை நெருங்கிய சொந்தமாகவும் இருத்தல் வேண்டும். பூஜை செய்பவருக்கு மகள் இருந்தால் அவரையும் சேர்த்துக் கொள்ளலாம்). முதலே அவர்களிடமிருந்து அவர்களுடைய ரவிக்கை வாங்கி வைக்க வேண்டும். அந்த 5 ரவிக்கைகள்+பூஜை செய்பவருடைய ரவிக்கை=மொத்தம் 6 ரவிக்கைகள், புதிய ஆறு 9 கெஜம் புடவைகள்(பச்சை நிறம் உகந்தது), 5 புதிய ரவிக்கைத்துணிகள் ஆகியவற்றை மடியில் உலர்த்த வேண்டும். பூஜை நடைபெறும்போது 6 பெண்களும் எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும்.  பின் மடிப்புடவைகளை அனைவரும் உடுத்திக் கொள்ள வேண்டும். பூஜை செய்பவர் 5 பெண்களையும் கிழக்கு நோக்கி வரிசையாக அமர்த்தி, அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், பூ, வெற்றிலை, பாக்கு, பழம், மங்கல சாமான்களான  கண்ணாடி, வளையல், சீப்பு, காதோலை-கருகுமணி,  கண்மை, கெஜவஸ்திரம், தக்ஷிணை, மடி ரவிக்கை இவற்றை ஒரு சிறு டப்பாவில் வைத்துக் கொடுத்து, அவர்களுக்கு உருட்டாணி செய்ய வேண்டும். அதாவது, மஞ்சள்தூளை எடுத்து வலது, மற்றும் இடது கன்னம், வலது, மற்றும் இடது கையில் லேசாக தீற்றி, முதலில் வலது காலுக்கு மஞ்சள் தூளை  நீர் சேர்த்துத் தடவ வேண்டும். அதேபோல் இடது காலுக்கும் செய்ய வேண்டும். பின், மஞ்சள் தூளில் சுண்ணாம்பு  சேர்த்து (ஹளிதி என்பார்கள்) வலது கை ஆள்காட்டி விரல் கொண்டு இரு கால்களின் ஓரத்திலும் கோடு போட்டு, கால் நடுவில் குறுக்காக இரு கோடுகள் போட்டு, அதன் நடுவில் ஒரு பொட்டு, மற்றும் கால் கட்டைவிரல் மேல் ஒரு பொட்டு ஹளிதியினால் வைக்க வேண்டும். பின், சுமங்கலிகளுக்கு ஆரத்தி எடுத்து விட்டு, பூஜை செய்பவரின் குடும்பம் அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற வேண்டும். பின் இலை போட்டு, இலை முன்பு கோலம் போட வேண்டும். மெழுகுவர்த்தி இலைகளின் இருபுறமும் ஏற்ற வேண்டும். மடியாக பண்டிகை சமையலை சுமங்கலிகளுக்குப் பரிமாறி, அவர்கள் உண்ட பின்பே மற்றவர்கள் உணவு உண்ண வேண்டும். இதை, திருமண வைபவம் நடைபெறும் முன்பு ஏதாவது வெள்ளிக்கிழமை செய்யலாம். இதை பெண் வீட்டார் தங்கள் வீட்டிலும், மாப்பிள்ளை வீட்டார் தங்கள் வீட்டிலும் செய்வார்கள்.

6.சாதேவி பூஜை : ஒரு மடிப்பாட்டியை வீட்டுக்கு அழைத்து மடியாய் உணவு செய்து பரிமாறி, வெற்றிலை, பாக்கு, புடவை, ரவிக்கை, தக்ஷிணை வைத்து வழங்க வேண்டும். இதுவும், பெண் வீட்ட்டார் தங்கள் வீட்டிலும், மாப்பிள்ளை வீட்டார் தங்கள் வீட்டிலும் செய்வார்கள்.

7.பந்தக்கால் நடுதல் : இதற்கு குறைந்த பட்சம் 5 சுமங்கலிகளை அழைக்க வேண்டும். பந்தக்கால் நடுபவருக்கும், பந்தல் போடுபவருக்கும் முன்பே சொல்லி விட வேண்டும். அவர்கள் பந்தக்கால் நட குழி தோண்டித் தருவார்கள். பந்தக்காலுக்கு பால், மற்றும் தண்ணீர் மூன்று முறை விட்டு, மஞ்சள், குங்குமம், பூ, அட்சதை, சந்தனம், கஜவஸ்திரம் கொண்டு அனைவரும் பூஜை செய்த பின், பந்தக்காலை அனைவரும் பிடித்து நட வேண்டும்.அதற்கு ஆரத்தி எடுக்க வேண்டும். வந்திருந்த அனைவருக்கும் உணவளிக்க வேண்டும். வாசலில் பந்தல் போட்டு, வாழை, கமுகு, தென்னை ஓலைகளால் பந்தலை அலங்கரிக்க வேண்டும். வாழைமரம் இருபுறமும் குலையுடன் கட்ட வேண்டும். மாவிலைத் தோரணமும் கட்டி வீட்டு வாசலை அழகுபடுத்த வேண்டும். பந்தக்கால் நடுதலையும் பெண் வீட்டார் தங்கள் வீட்டிலும், மாப்பிள்ளை வீட்டார் தங்கள் வீட்டிலும் செய்வது வழக்கம்.

8.தேவரு பூஜை : மண்டபத்திற்குப் பெண் வீட்டார் கிளம்பும் முன்பு, புரோகிதர் வந்து வீட்டில் சாலிகிராம பூஜை செய்விப்பார். அதேபோல மாப்பிள்ளை வீட்டார் தங்கள் வீட்டில் செய்வார்கள்.

மண்டபத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களைப் பற்றி அடுத்த வலைப்பதிவில் சொல்கிறேன்.

 

 

468. How to increase blood circulation?

We all know that we become dull when the blood circulation is not proper. We have to take proper care to increase the blood circulation so that we can do our normal works efficiently.

Due to some disease, the blood circulation may decrease. Peripheral artery disease (PAD), diabetes, obesity and  smoking  are some of the many causes of poor circulation. Reduced blood flow can cause unpleasant symptoms, such as pain, muscle cramps, numbness, digestive issues and coldness in the hands or feet.

Some food items help us to increase our blood circulation. Capsicum red, green and yellow help to expand blood vessle. Consuming pomegranate as juice, raw fruit or supplement  may improve blood flow and oxygenation of muscle tissue, which could especially aid active individuals. Onions are an excellent source of flavonoid antioxidants, which benefit heart health. Cinnamon is a warming spice that has many health benefits including increased blood flow. Garlic is well known for its beneficial impact on circulation and heart health. The vegetable beetroot is the best source of energy for increasing blood circulation.

Our lovely turmeric helps us a lot for blood circulation. Leafy green vegetables increase blood flow. Citrus fruits like oranges, lemons and  grapes are packed with antioxidants, including flavonoids. Eating walnuts may reduce blood pressure, improve blood vessel function and decrease inflammation. Tomatoes may help reduce the activity of angiotensin, converting enzyme (ACE), which causes blood vessels to constrict to control blood pressure. Berries  have antioxidant and anti-inflammatory qualities, which may have a positive impact on blood flow. Ginger, a staple in traditional medicine in India and China for thousands of years, can likewise lower blood pressure and improve circulation.

In addition to taking vitamins and supplements to boost our blood flow, we can improve our body’s circulation by leading a healthy lifestyle that incorporates things like doing exercise, stress management, massage, lot of fluid intake and stopping smoking.

So, let us hope that we can lead a healthy life by taking proper food and following the correct lifestyle so that we can increase blood circulation.

467. Kasi Samaradhana

We visited Rameshwaram first and brought the sand. We took it to Kasi and immersed in Ganga river. We visited Rameswaram once again to give the Ganga Jal brought from Kasi, for doing abhishekam to Ramanathaswamy. Finally, we did Kasi Samaradhana.

We did puja in Raghavendraswamy Mutt and gave Kasi Ganga Jal pot, Annapoorani Vigraha, Prasadham, Kasi Kayiru and  Vishnu Padam to all our relatives. We did Thambathi puja to an aged couple and gave them Dhothi-Sari. We gave Muradhubayana to 5 Sumangalis, by keeping all he mangala items in Muram.  We did Go-dhana by keeping Cow-Calf in brass on a brass plate. We also did Phala-dhana  by keeping 5 types of fruits, each 4 in number, in a big brass thambalam and gave it with all mangala items. Finally, we did Dheepa-Dhana  to 10 male members.

The Kasi Samaradhana Puja was over by doing all the Dhanas. We fed all our relatives and 10 brahmins. The kasi Yathra is complete with this puja. We returned home with full contentment.

466. Kasi Yathra – VI

In Kasi, our visits were over and we saw in two days as much as we can. On the second day night by 12 AM, we were asked to get ready. We travelled by bus to Gaya. It was really a tedious journey. As we were the first persons to book for the trip, we got seat in the front row. We could reach Gaya after travelling for nearly 8 hours.

We were accomodated in  Udupi Mutt, in Gaya. We were given coffee and asked to get ready for Srartha. It took a long time, as about 20 people participated. Immediately, we all were taken by walk through very narrow lanes and huge crowd to offer Pind to our ancesstors. There is nothing better than paying tribute to our ancestors soul. I felt like on a journey, after end of our life.

The pind daan has to be offered in three places. First, we went to  Phalgu River. My husband and other male members carried the balls and perform the pooja on the banks of the river, which was almost dry.  Next, at , the male members carry the balls and perform the pooja in the temple complex. Finally, they offer it at the feet of Lord Vishnu. A big size Vishnu Pad is kept there. The third place is Akshay Vat tree. The Pind balls are kept under the tree, with prayers.

After making small purchases, we returned to Udupi Mutt by walk and had our lunch directly, by 3 PM. After taking rest for sometime, we started by bus to Allahabad.  The distance from Gaya was about 380 KM and it took nearly 10 hours travel.  We stayed in Swaminarayan Mandir Dharamshala.  After taking bath and wearing new sari, we started for visiting some temples and doing Veni dana.

Nagvasuki Temple, located in Daraganj is situated on the banks of the River Ganges. Dedicated to Vasuki, who was the king of serpents, this temple is visited by large number of tourists every year. A fair is held every year near this temple on the occasion of Nag Panchami. We can see here statues of many legendery characters like Bhishm Pitamah, the great warrior of Mahabharata. This is one of the most ancient temples of Allahabad.

Another temple we visited was Veni Madhav temple, located in  proximity to the Prayag Ghat is situated on the banks of river Ganges. This temple is dedicated to Lord Vishnu or Narayana and to Lakshmi, who was the wife of Narayana. Believed to be blessed with the presence of idols of God Vishnu and his wife Lakshmi, this temple is also known as LakshmiNarayana temple.

Finally, we visited Alopi Devi temple. This temple is regarded to be one of the 18 shaktipeeths and also the holliest of them all. The uniqueness of the temple lies in the fact that there is no statue of the Deity that is worshipped here. In the sanctom sanctorum of the Alopi Devi Temple, lies a wooden cot, also known as “doli” of the new bride. It is this wooden craft that is devotedly worshipped by the people from all over the country. According to the Hindu belief, while Lord Shiva was grieviously travelling through the skies with the burnt body of his wife Sathi, Lord Vishnu threw his chakra at the corpse in order to relieve Lord Shiva from his pain. The various places where the body parts fell were sanctified and deemed as “Shaktipeeths”. Alopi Devi temple is the place where the last part fell, marking the disappearance of Sathi. Hence this place came to be known as Alopi which means disappeared.

Finally, we we left in a place where puja for Veni Dhan was performed The puja took place for more than 1 hour. The Pandit said the Manthras in a very fast manner and we followed & did puja  as per his instructions. Finally, we carried the items of Morathubayana and walked with the boatman. We travelled in a boat for about half an hour to a place called Sangam, where many boats like us gathered.

We had to cross three boats, parked nearby and reached a platform, where we took a bath in Thriveni Sangam and did veni dhana.  We showed morathubayana to the rivers.. Again, we came back, gave  the morathubayana, dakshin etc to the pandit and returned to our place, for taking lunch. After lunch, we visited Ananda Bhavan, the house of Pandit Jawaharlal Nehru.  Finally, we started to Allahabad railway station. We came by train from there to Jansi. From Jansi we caught another train to Coimbatore.

The trip was really good and we could see many places.

465. Kasi Yathra – V

After finishing small purchases, we returned to our room. A friend of us in the next room called us and asked us to accompany for seeing Banaras saris nearby. We went with them and spent about 2 hours for selecting & purhasing few saris.

When we came back, we were asked to get ready for boating and seeing Ganga Aarathi.  Words are not sufficient to explain the beauty of ganges and uniqueness of Gabga Aarathi.  On the way of seeing the Ganga Aarathi, we visited many famous Ghats. There are nearly 64 ghats. The famous and oldest ghats of all these are the Dashashwamegha, Manikarnika and Harishchandra Ghat. Some of the ghats are made there by Hindu rulers such as Ahilya Bai Holkar of Malwa region, Peshwa’s of Gwalior, Man Singh of Amber, Jai Singh of Jaipur etc. Most of the ghats were made at the time of Maratha.

All of our group people were accomodated in a big boat.  There were hundreds of boats around us, carrying Indian and foreign tourists. Some costly boats with lot of decorations and facilities were also visible, to attract rich tourists. Our local guide was explaining and making us to see the important ghats.  The ghats are primarily used for bathing and puja rituals, but there are two  viz., Manikarnika and Harishchandra ghats where cremations are solely performed.

The boats were taken for a ride to visit all the important ghats and finally gathered before Dashashwamedh ghatGange Aarathi is performed daily in the evening by a group of priests there. Through the Aarathi, Agni Pooja is performed in which a commitment is made to the Lord Shiva, Matha Gange, Surya, Agni  as well as the whole universe made by the Lord Shiva. This beautiful ritual makes every moment of the evening period special and fills with the spiritual thoughts. It is performed by the brass lamps which accompanied with the mantra chant in the presence of the huge crowd. There are 5 priests on one side and 7 on another side. We were able to watch both sides, sitting in our boat.

All the priests who have to perform the Aarathi, wear same cloth, the dhoti and kurta which is tightly bind with a long towel. First they make preparation  by making collection of the five elevated planks, a multi tiered oil lamp, an idol of the Goddess Ganga, flowers, incense sticks, a conch shell, a big and heavy brass lamp having a snake hood at the edge of the River Ganga.  Ritual of the Gange Aarathi is performed by the students of the Vedas and Upanishads which is lead by the head priest of the Gangothri Seva Samithi. The whole event takes around 45 minutes, from 6.45 PM. Every person born in this world has to see this Ganga Aarathi in his/her lifetime.

The boats dropped us in Kedharnath Ghat. We liked to visit some temples near this ghat. This ghat is famous for  Kedar temple is in this place. The belief is that our visit here is as good as visiting the kedarnath temple in the Himalayas. a real spiritual experience. We also visited Chinthamani Ganapathy temple and returned by walk to our room.

I will continue the details in my next blog.

464. Kasi Yathra – IV

After visitng Kasi Viswanathar, we moved to visit Annapoorani Devi, the Goddess of Food.  There was a golden idol of the Annapurna Matha in the Annapurna temple.  Annapurna temple has a huge crowd of pilgrims at the occasion of Annacoot. Annacoot festival is celebrated in India every year after Diwali. On the occasion of Annacoot, coins are distributed to all the devotees. It is considered that whoever will worship this coin, he will be blessed by the Annapurna Matha for his successful and prosperous life. Annapurna Matha is the Goddess of the Varanasi city who always protects the Kashi and fulfill His devotees with the food.

Once, Lord Shiva said to the Goddess Parvathi that the whole world is an illsion and the food is the part of that known as ‘Maya’. The Goddess of food, Matha Parvathi became very angry and She had to show the importance of all the material, in order to that She had vanished all things from the world. In the absence of food from the earth, the earth became infertile and everyone had suffered from the deep hunger. She had to reappear in the world by seeing His devotees suffering from the deep hunger. She, then made a kitchen in the holy city, Varanasi. Lord Shiva too came to Her and said that I understand that the material can never be sent away as an illusion. Matha Parvathi became very happy and offered food to the Lord Shiva with her own hands. From that time Matha Parvathi is worshiped as an Annapurna means the Goddess of Food. It is considered that She does not eat a little bit till the time Her devotees have not been fed in Her temple.

After visiting  temples, as much as we can, we got very much tired, walked slowly. We caught an auto after 10 minutes and reached our place of stay. We had dinner and went for sleep at about 11 PM.

Next day morning our tour organiser has arranged for doing srartham in Uttaradi Mutt. After having meals, we went to a nearby shop for purchasing Kasi Gangajal Sombu, Annapoorani vigraha, Vishnu Padam and Gomuki chakra stone. You might have known about other things. I will just tell a few words about the Gomuki chakra stone. Found in the Gomathi River, the Gomati chakra stones are popular remedies for many problems people face in their day to day lives. Gomati Chakra is a white coloured stone with small circles seen on one side of the stone and the chakras are considered to be a symbol of Goddess Lakshmi. Gomati Chakra resembles the Sudarshan Chakra or Discus of Lord Krishna. According to many Vaishnavas and oral tradition in Northern India, the Gomathi Shilas were once part of Lord Krishna’s palaces in Dwaraka. They were used to adorn the walls and floor of many of Sri Krishna’s palaces. The Gomathi chakra stone can be used in innumerable ways to fix problems in one’s life. It is used as a Yantra and also is used in worships. It is believed that those people who possess Gomathi Chakra will be blessed with money, good health and prosperity. Gomathi Chakra Shilas are used along with Shaligrams in some special worship.The “Salagrama-Kosha” quotes that when Shaligram and Gomati Chakra are placed together and worshipped, the mass of sin will be burned down. Gomati Chakra Shilas are also used as protective amulet for children. Gomati shilas brings in wealth and good health.

OK, I will continue with more interesting news about our travel, in my next blog.

 

463. Kasi Yathra – III

In Kasi,  after visiting Durga temple, we went to Sankata Moksha Hanuman temple.  Here, the devotees  offer Prasad and Sindoor on the statue to the Lord Hanuman, which is sealed in the campus of the temple. They also decorate the idol of the Lord Hanuman with the flower garland. The temple of the Sankat Mochan has unique feature by having the idol of Lord Hanuman in front of his Lord Rama. According to Astrology, Hanuman saves human beings from the anger of the planet Shani, and especially people who have an ill-placed Saturn in their horoscopes visit this temple for astrological remedies.

Our next place of visit is Kavadai amman temple.  Here, we have to offer 5 kavadai or choli to the Goddess along with flowers. The priest  keeps them in front of Her. It is believed that She takes our misfortune and grants good luck to us. The priest gives back one kavadai to us, for keeping  in our pooja room.

Finally, we returned to our room. After, having tea, we started by auto to the famous Kashi Viswanath temple. As the crowd was more,  the automan  dropped us at a place about two KM from the temple. The guide took us through many narrow lanes. We almost ran behind him, in the traffic. First, he took us to the famous Visalakshi Amman temple. The Vishalakshi Temple or Vishalakshi Gauri Temple is dedicated to the goddess VishalakshiMaa, meaning wide eyed Devi. It is located at Mir Ghat. This temple is among the 52 Shakthi Peetams, and is part of the famous triad of temples – Kanchi Kamakshi, Madurai Meenakshi and Kashi Visalakshi. When Adi Shankaracharya visited the temple, he performed prayers to replenish the powers of the temple, which had borne the brunt of several invasions. He also installed a Sri Yantram and it is to this Yantram that puja is done. Kumkumarchana to this Sri Yantram is considered very auspicious.

Next, we went to have the darshan of the famous Kasi Viswanathar.  It  is one of the twelve Jyothirlingas, the holiest of Shiva temples.   Vishveshvara meaning Ruler of The Universe. Kasi Vishwanath Temple is one of the most famous temple in Varanasi, also known as the Golden temple dedicated to the Lord Shiva. It was constructed in the year 1780 by the Maratha monarch, Maharani Ahilyabai Holkar of the Indore. This makes Varanasi a tourists place because of great religious importance to the Hindus. True devotees of the Lord Shiva get freedom from the cycle of the death and birth. After death they directly intermingled into the Mahadev. People beliefs that the one who decided to end their life at the temple, Lord Shiva himself drive a mantra of freedom in his ear.

We had to walk and stand in queue for a long time again. The crowd was much more as went near and the police people simply pushed away all the devotees,  before having the darshan of God. They could have allowed to stand there atleast for a few seconds. We stood at a distance and tried to see the Lord, again & again. Many people of our group came again on the next day, to have the darshan, once again. We thought  that Lord Viswanathar will call us once again to visit Him, after some years.

I will continue the details of the visit in my next blog.

462. Kasi Yathra – II

There is a saying about Kasi Kalabairavar temple, “Even air won’t enter Kasi city without the permission of Kalabairavar.  We will be get rid of all the worries and threats by our enemies, if we fell into the feet of Kalabairavar”. So, our first visit in Kasi was really useful to recharge our mind and body.

After returning to our room, we had lunch. Immediately we started to visit more places. We were taken to Birla Mandir by jeep.  The Birlatemple in Varanasi is called as Shri Vishwanath Mandir. It is one of the famous temple for its architectural beauty and serene factor. The temple has the highest temple tower in the world. The temple is 77 metre long. The temple is completely made of marble. There are 9 shrines inside this temple. In the ground floor, there is a large Shiva temple. In the first floor, there are shrines for Durga and Lakshmi Narayan. Other main temples are Hanuman temple, Ganesh temple, Parvati temple, Nataraj temple, Saraswathi temple and Nandi. The complete prose of the Gita is inscribed on the walls along with pictures. Since it is a replica Kashi Vishwanath temple, it is called as the New Vishwanath temple.

Next, we went to Thualasi Manas Mandir. It is located at Durgakund very close to the Durga Temple in the Varanasi city. It is made up of the white marble in the year 1964 and looks very attractive having beautiful garden. The temple is dedicated to the Lord Rama and constructed by the family of Banaras. The temple has beautiful images of the Ram, Sita, Lakshhman and Hanuman.  It is believed to be built at the same place where Tulsidas wrote the famous Indian epic, Ramcharitamanasa. The walls of the Tulsi Manas temple are engraved with verses and scenes from the Ramcharitammanasa, the Hindi version of the Ramayana. I lost my cheppal in this temple. My husband was very careful as he left the cheppal in the jeep itself.

Then, we went to Durga temple nearby. Durga temple is also known as the Monkey temple because of the presence of huge number of monkeys, situated in the Durga Kund, Varanasi.  It was built in the 18th century. Durga temple was constructed by a Bengali Maharani in the north Indian Style with multi tiered shikhara.  The statue of Goddess Durga is not human made; it was appeared by its own in the temple. This temple is made up in the square shape with the red color stone representing the color of the Matha Durga.

I will talk about more and more temples in my next blog.